பொங்கல் பண்டிகை வந்துவிட்டால், ஆந்திராவில் உள்ள குழந்தைகளுக்கெல்லாம் கொண்டாட்டம் பிறந்துவிடும். ஏனெனில் இவர்களை காசு மழையால் நனைப்பார்கள். பொங்கலை, சங்கிரமணம் என்ற பெயரில் மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள் அங்கே. மூன்று நாளும் பொம்மைக் கொலு வைப்பார்கள். முதல் நாள் மாலையில் இலந்தைப்பழமும் சில்லறைக் காசுகளும் கலந்து அவரவர் வீட்டுக் குழந்தைகளின் தலையில் கொட்டுவார்கள். காசுமழையில் நனைந்து மகிழ்வார்கள் குழந்தைகள். பிறகு, அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கும் காசுகளைக் கொடுப்பார்கள்.