கும்பகோணம் அருகே உள்ள கீழச் சூரியமூலையில் அருள்பாலிக்கும் சூரிய கோடீஸ்வரரை தரிசித்து சூரிய பகவான் பிரதோஷ பலனை அடைந்தார். பொதுவாக சூரியனின் திருமேனி ஆலயத்தின் கிழக்குப் பிராகாரத்தில் இருப்பது வழக்கம். ஆனால் லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூரில் உள்ள திருமூலநாத சுவாமி ஆலயத்தில் ராஜ கோபுரத்தின் உட்புறம், இடதுபுறம் தனியான ஒரு மாடத்தில் சூரிய பகவான் அருள்பாலிக்கிறார். சூரியனுக்கான முதல் கோயில், உதயகால். இளம் கதிர்களை வீசும் சூரியனுக்காக இது கட்டப்பட்டது. உதயாச்சலம் என்ற இடத்தில் இக்கோயில் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இரண்டாவது கோயில், உச்சிவேளை சூரியனுக்காக சந்திரபாகா நதிக்கரையில் கட்டப்பட்டது. இன்றைய ஜீனாப் நதியே, அன்றைய சந்திரபாகா. மூன்றாவது கோயில், மாலை நேரத்து சூரியனுக்குக் கட்டப்பட்டது. இது குஜராத் மாநிலத்தில் மொதோரா என்னும் இடத்தில் உள்ளது.