பதிவு செய்த நாள்
17
ஆக
2013
10:08
பழநி : கடைசி ஆடிவெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, பழநி மலைக்கோயில், பெரியநாயகியம்மன், மாரியம்மன், திருஆவினன்குடி ஆகிய கோயில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பழநி மலைக்கோயிலுக்கு பால்குடம், காவடி ஆட்டம் பாட்டத்துடன் ஏராளமான பக்தர்கள் வந்தனர். வின்ச் ஸ்டேசனில் 2 மணிநேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். பொது தரிசன வழியில் 2 மணிநேரம் காத்திருந்து ஞான தண்டாயுதபாணி யை வழிபட்டனர்.கடைசி ஆடிவெள்ளியை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோயிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடந்தது.பழநி மாரியம்மன் கோயிலில் அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பழநி பூ வியாபாரிகள் சங்கம் சார்பாக, கலைவாணி, சமயபுரம் மாரியம்மன் வடிவில் அம்மன் காட்சி தந்தார்.திருஆவினன்குடி கோயில் துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. லட்சுமிபுரம் மகாலட்சுமி கோயிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.பழையதாராபுரம் ரோடு ரெணகாளியம்மன் கோயில், தெற்குகிரிவீதி காளிகாம்பாள் கோயில் ஆகிய கோயில்களில், சுமங்கலிகள் தாலிக்கயிறு மாற்றினர்.
*திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பரம்பரை நிர்வாக அறங்காவலர் சண்முக முத்தரசப்பன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தங்கரத புறப்பாடு நடந்தது