Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வேம்பு-அரசமரங்களுக்கு திருமணம்: ... வழிபாடு இல்லாத கிராம கோவில்களுக்கு விமோசனம்! வழிபாடு இல்லாத கிராம கோவில்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கபாலீஸ்வரர் கோவிலில் ஜீன்ஸ், டி ஷர்ட்டுக்கு தடை?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஆக
2013
10:08

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், "ஜீன்ஸ் பேன்ட், டிஷர்ட் போன்ற நவநாகரிக உடைகள் அணிந்து வர, விரைவில் தடை விதிக்கப்படும் என, கூறப்படுகிறது. பெண்கள் அணியும் நவநாகரீக உடைகள், ஆண் பக்தர்களின் கவனத்தை திசை திருப்புவதாக கோயில் நிர்வாகத்தினர் இடையே எழுந்துள்ள கருத்தை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.

குற்றச்சாட்டு: தற்போது கோவில்களுக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள், "டி ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், பெர்முடாஸ், ஸ்கர்ட் போன்ற நவநாகரிக ஆடைகளை அணிந்து வருகின்றனர். குறிப்பாக இளம்பெண்கள் பலரும் இறுக்கமான உடைகளை அணிந்து வருவதால், ஆண் பக்தர்களின் கவனம் திசை திரும்புவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அதே நேரத்தில், கோவில்களில் மரபு சார்ந்த ஆடைகளை தான் பக்தர்கள் அணிய வேண்டும் என்ற வாதமும் இருந்து வருகிறது. கேரள மாநிலத்தில், பல கோவில்களில் இத்தகைய கட்டுப்பாடு இருந்து வருகிறது. தமிழகத்தில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளிட்ட சில கோவில்களில், ஆண்கள், மேலாடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எப்படி அமல்?: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பெண்கள் சேலை, சுரிதார், பாவாடை போன்ற உடைகளையும்; ஆண்கள் வேட்டி, சட்டை, சாதாரண பேன்ட் போன்ற உடைகளையும் அணிந்து மட்டுமே கோவிலுக்குள் வர வேண்டும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.துவக்கத்தில், உடை கட்டுப்பாடு குறித்து, பக்தர்களுக்கு, நோட்டீஸ், அறிவிப்பு பலகை போன்றவற்றின் மூலம் தெரிவித்துவிட்டு, பின் குறிப்பிட்ட கால இடைவெளியில், தடையை அமல்படுத்த கோவில் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. மேலும், குறிப்பிட்ட நாட்களில் மட்டும் நவநாகரிக உடைகள் அணிய தடை விதிக்கப்பட்டு, பின், அடுத்தடுத்த நாட்களுக்கும் தடையை விரிவுபடுத்தும் எண்ணமும், கோவில் நிர்வாகத்துக்கு உள்ளது. இது குறித்து, கோவில் நிர்வாக அதிகாரிகள், பதில் அளிக்க மறுத்து விட்டனர். கபாலீஸ்வரர் கோவிலில் ஆடை கட்டுப்பாடு, அமலுக்கு வரும் போது, சென்னையில் உள்ள மற்ற கோவில்களும், அதை பின்பற்றி, உடை கட்டுப்பாட்டை கொண்டு வரக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.

சரிதானா?: கபாலீஸ்வரர் கோவிலில் ஆடை கட்டுப்பாடு குறித்து, பக்தர்கள் சிலர் வரவேற்றுள்ளனர். அதேநேரம், இந்த நடவடிக்கை சரியான ஒன்றா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.கல்யாண வீட்டிற்கு அலங்கோலமாக போவதும், இழவு வீட்டிற்கு அலங்கரித்துக் கொண்டு போவதும் அபத்தம். ஏனெனில் அவை அந்தந்த சமூக சூழல்களுக்கு தகுந்த உடைகள் அல்ல. ஆனால், கோவிலுக்கு செல்வதற்கு எது சரியான ஆடை? எது சரியான கோலம்? இதற்கு பதிலளித்த சிலர் நம் மரபை பின்பற்ற வேண்டும் என்கின்றனர். அதாவது பண்டை காலங்களில் இருந்து பின்பற்றப்பட்ட ஆடைகளையே அணிய வேண்டும் என்கின்றனர். ஆனால், இந்த பிரச்னைக்கு எந்த காலகட்டத்தை கருத்தில் கொள்ள வேண்டும்?

திசை திருப்பப்படுகிறதா?: தைத்த ஆடைகள் இல்லாத காலம் இருந்தது. பெண்கள் மேலாடை அணியாத காலமும் இருந்தது. பெண்கள் கச்சை கட்டும் காலம் இருந்தது. அதிலும், ஒவ்வொரு சாதியினருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருந்தது. அதே போல் வேட்டி அணிய வசதி இல்லாத ஆண்கள், பண்டை காலங்களில் இடுப்பு துண்டு மட்டும் அணிந்ததாக கூறப்படுகிறது. கண்கவரும் வண்ணம் அலங்கரித்து, ஆடை அணிந்து ஆடிப்பாடிய தேவதாசிகள், கோவில்களில் கோலோச்சிய காலங்களும் இருந்தன. அப்போது பக்தர்களின் கவனம் திசை திருப்பப்பட்டதா என்பது நமக்கு தெரியாது. ஆனால், அத்தகைய கவர்ச்சியில் ஒருசிறு பங்குகூட இல்லாத இந்த காலகட்டத்தில், சுய கட்டுப்பாடு இல்லாத சில ஆண் பக்தர்களின் கவனம் திசை திருப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஆனால் இதில் பெண்களின் நிலையை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஆண்கள் சட்டை அணியாமல் கோவிலுக்குள் வருவது மரபு என்றால், அது பெண் பக்தர்களின் கவனத்திற்கு பங்கம் விளைவிக்காதா? குறிப்பாக திருமணமாகாத இளம்பெண்கள் பாதிக்கப்படுவரா என்ற கேள்வியும் உள்ளது.

எது மரபு?:
மரபு சார்ந்த ஆடைகளை வலியுறுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், எது மரபு என்று முடிவு செய்வதில் சிக்கல் ஒரு பக்கம் இருக்க, ஆண் பக்தர்களின் கவனம் குலைவதாக கூறி பெண்கள் மீது கட்டுப்பாடு விதிப்பது பிற்போக்கான கலாசாரங்களில் பின்பற்றப்படும் ஒன்று. ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆண்கள் பேன்ட் அணிந்து கோவிலுக்கு வருவதும் தடை செய்யப்பட வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar