வேம்பு-அரசமரங்களுக்கு திருமணம்: சீர்வரிசைகளுடன் சிறப்பு யாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2013 10:08
திருப்பூர்: முதலிபாளையம் பிரிவில் உள்ள வஞ்சியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, வேம்பு மற்றும் அரச மரங்களுக்கு திருமண விழா நடந்தது.முதலிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள வஞ்சியம்மன் கோவில், நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இக்கோவிலில் ஆண்டு விழா நேற்று நடந்தது. முன்னதாக, கோவில் கமிட்டியார் சார்பில் வேம்பு மற்றும் அரச மரங்களுக்கு திருமணம் செய்விக்கப்பட்டது. 108 சீர்வரிசை பொருட்களுடன் சிறப்பு யாகம் நடத்தி, வேம்பு மற்றும் அரச மரங்களுக்கு அபிஷேக பூஜை, அதைத்தொடர்ந்து, மங்கல நாண் அணிவிக்கப்பட்டது.முன்னதாக, இரண்டு மரங்களுக்கும் மஞ்சள் பூசி, நேர்த்திக்கடனாக மலர் மாலை சூட்டி பக்தர்கள் வழிபட்டனர். பொதுமக்கள் நலன் கருதி, யாகபூஜையும், வஞ்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.