கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருநெல்வேலி: ஹயக்ரீவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நெல்லை சிதம்பரநகர் லெட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் சுவாமிக்கு கவசம் அணிவிக்கப்பட்டது. நெல்லை சங்கர்நகர் சிதம்பரநகரில் ஹயக்ரீவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு லெட்சுமி ஹயக்ரீவருக்கு திருமுடி முதல் திருஅடி வரை (கவசம்) சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனையும், அலங்காரமும் செய்யப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பூஜையில் வைத்த நோட்டு புத்தகங்கள், சீருடைகள், பேனாக்கள் வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மாதவன் பட்டாச்சாரியார், வரதராஜ பட்டாச்சாரியார், வெங்கடேஷ் பட்டாச்சாரியார் செய்திருந்தனர்.