அரியலூர்: அரியலூர் ஆஸ்பத்திரி தெருவில் உள்ள ஸ்ரீ வீரமா காளியம்மன் கோவிலில் ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு, அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், சந்தன காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடத்தப்பட்டது. பக்தி சிரத்தையுடன் நடந்த இந்த உற்சவத்தில், ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க செயலாளர் சுப்ரமணியன், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன், தொழிலதிபர் அழகிரிசாமி, கோவில் நிர்வாகிகள் கணேசன், கிருஷ்ணமூர்த்தி, கிரி, சீனிவாசன் மற்றும் அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.