ஊட்டி : தர்ம ரக்ஷன சமிதி சார்பில், கிராமங்கள் தோறும், 9 நாட்கள் ராமர் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. ஊட்டி சோலூர் அருகே புது கோக்கால் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக பூஜை நடந்தது. தலைகுந்தா ஆல்காட், சோலூர் எஸ்டேட்டில் நடந்த விழாவில், சிறப்பு வழிபாடுகள், பஜனை நடந்தது. நிறைவு நாளில் பட்டாபிஷேக பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சமிதியின் கிளை செயலாளர் சிவன் செய்திருந்தார். தொடர்ந்து பல்வேறு கிராமங்களிலும் ராமர் பூஜைகள் நடத்தப்பட உள்ளன.