பதிவு செய்த நாள்
29
ஆக
2013
10:08
பாலக்காடு: கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பாலக்காட்டில் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்த குழந்தைகளின் ஆடல்பாடல் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தன. கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன் பின், அலங்கரிக்கப்பட்ட யானைகளில் கிருஷ்ணர் சிலை, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், பாலக்காட்டில் நடந்த விழாவில், வடக்கஞ்சேரி பாலகோகுலம் சார்பில், 600க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். அப்போது, குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து ஆடல், பாடல்களுடன் வந்தனர். மாவட்ட மருத்துவமனை, கோட்டை மைதானம் வழியாக கோட்டை ஆஞ்சனேயர் கோவிலை, ஊர்வலம் சென்றடைந்தது. குன்னத்தூர்மேடு ஸ்ரீகிருஷ்ணர் கோவிலிலும், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.