கேளம்பாக்கம் : தையூர் பெரிய பில்லேரி தண்டு துலுக்காணத்த அம்மன் கோவிலில், பால்குடவிழா மற்றும் கூழ்வார்த்தல் கோலாகலமாக நடந்தது. கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஊராட்சி பெரியபில்லேரி, தண்டு துலுக்காணத்தம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி ஆறாவது வாரம் கோவில் விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு விழா, கடந்த 25ம் தேதி நடந்தது. விழாவை ஒட்டி பால்குட ஊர்வலம் வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் மதியம் கரக ஊர்வலத்துடன் வீடுகள் தோறும் கூழ்வார்த்தல் விமரிசையாக நடந்தது. இரவு அம்மன் தண்டு துலுக்காணத்தம்மன் மஞ்சள்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் ஏராளமானோர் அர்ச்சனை செய்து அம்மனை பக்தியுடன் வழிபட்டனர்.