திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஸ்ரீராமர் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா உறியடி உற்ஸவத்துடன் வெகுவிமரிசையாக நடந்தது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஸ்ரீராமர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி காலை ஸ்ரீராமர், லட்சுமணர், சீதைக்கு திருமஞ்சனமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. மாலையில், குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து உறியடி உற்ஸவம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு ஸ்வாமி புறப்பாடு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தது. இதில், கிருஷ்ணர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், தஞ்சை யமுனாபாய் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, வழிபாடு நடத்தினர். ஏற்பாட்டை ஸ்ரீராம நாம வாரவழிபாட்டு ஸபையினர் செய்திருந்தனர்.