பதிவு செய்த நாள்
02
செப்
2013
11:09
பேரம்பாக்கம்: காவாங்கொளத்தூர் சீனிவாச பெருமாள் கோவிலில், நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது காவாங்கொளத்தூர் கிராமம். இங்கு, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் சீனிவாச பெருமாள் கோவிலை புனரமைத்து, புதிய கோவில் கட்டி, மகா கும்பாபிஷேக விழா, நேற்று, நடந்தது. முன்னதாக, சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு, விமான கலசம் மற்றும் புதிய படம் கரிக்கோல் ஊர்வலம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு, பகவத் பிரார்த்தனையும், திவ்ய பிரபந்த பாராயணம் கும்ப ஸ்தாபனமும், ஆராதனை பூஜைகளும், கலச அபிஷேகமும், வாஸ்து சாந்தி பூஜையும் நடந்தன. நேற்று காலை 5:30 மணிக்கு, விஸ்வரூப தரிசன கோ பூஜையும், கும்ப பூஜைகளும் நடந்தன. காலை 8:30 மணியளவில், விமான பிரதிஷ்டையும், மகா கும்பாபிஷேகமும் நடந்தன. இரவு, சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.