பரமக்குடி: பரமக்குடி வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பாக, மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. வட்டார உலமா சபை தலைவர் முகம்மது யாஸின் பார்கவி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அக்பர் பாட்ஷா மன்பஈ, அப்துல் வஹாப் மிஸ்பாகி முன்னிலை வகித்தனர். பொருளார் ஷாகுல் ஹமீது நூரி வரவேற்றார். சிறப்பு தொழுகையினை கீழப்பள்ளிவாசல் பேஷ்இமாம் ஜலாலுதீன் மன்பஈ நடத்தினார். மாவட்ட தலைவர் வலியுல்லாநூரி பேசினார்.