திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த கொடிக்களத்தில் மகா மாரியம்மன், ராயமுனியப்பர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாயொட்டி, நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு வாஸ்துசாந்தி, அனுக்ஞை, அங்குரார்பணம், கலா கர்ஷணம் கடஸ்தாபனம், முதல் கால பூஜை, பூர்ணாகுதி பிரசாதம் வழங்குதல் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி நடந்தது. காலை 9:00 மணிக்கு மேல் யாக சாலையிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை குணசீலன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் குழு செய்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.