பாப்பான்குளம் கோயிலில் 7ம் தேதி ரிஷப வாகன வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2013 10:09
திருநெல்வேலி: பாப்பான்குளம் மடவார் விழாகத்தில் வரும் 7ம் தேதி கருந்தீஸ்வரர், அழகம்மாள் ரிஷப வாகன வீதி உலா நடக்கிறது. கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் மடவார் விழாகத்தில் கருந்தீஸ்வரர்- அழகம்மாள் கோயில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னன் ஆதித்தவர்மன் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில் கிரக தோஷம் நீங்கவும், மக்கள் நலம் பெறவும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. இதுதவிர ஆண்டுக்கு ஒருமுறை சுவாமி மற்றும் அம்பாள் திருவீதா உலா நடக்கும். இந்த ஆண்டுக்கான திருவீதி உலா வரும் 7ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணிக்கு உதய காலபூஜை, 8 மணிக்கு யாகசாலை பூஜை, 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை அருள் நந்தி அடியார் பேவையினர், சிவதொண்டர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.