பதிவு செய்த நாள்
10
செப்
2013
10:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், ஏலேல சிங்க விநாயகருக்கு, 3 லட்சம் ரூபாய் நோட்டுகளை தோரணமாகக் கட்டி, பக்தர்கள் விழா எடுத்தனர். காஞ்சிபுரம், காமாட்சிஅம்மன் கோவில் சன்னிதி தெருவில் உள்ளது, ஏலேல சிங்க விநாயகர் கோவில். காமாட்சி யம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், இந்த விநாயகரை தரிசித்து செல்வர்.இங்கு, ஆண்டுதோறும் சதுர்த்தி விழா, சிறப்பாக நடத்தப்படுகிறது.வித்யாசமாக விழா நடத்த வேண்டும் என்பதற்காக, விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து, ரூபாய் நோட்டு களை தோரணமாகக் கட்டி, வழிபட துவங்கினர். இதற்கு, பக்தர்களிடம் பணம் பெற்று, விழா முடிந்த உடன், பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகின்றனர்.சதுர்த்தியையொட்டி நேற்று, ரூபாய் நோட்டு தோரண அலங்காரத்தில், விநாயகர் நேற்று அருள்பாலித்தார். மாலை வரை, அலங்காரத்தை கலைக்கவில்லை.கோவில் குருக்கள், ரமேஷ் கூறுகையில், கடந்த ஆண்டு, 2.5 லட்சம் ரூபாய் நோட்டுகளை தோரணமாக கட்டினோம். இந்த ஆண்டு, 3 லட்சம் ரூபாய் நோட்டுகளை தோரணமாக கட்டி, அலங்கரித்து உள்ளோம், என்றார்.