பதிவு செய்த நாள்
17
செப்
2013
10:09
தலைவாசல்: தலைவாசல் அருகே, நத்தக்கரை கிராமத்தில், மாரியம்மன் தேர்த்திருவிழா, வெகு விமரிசையாக நடந்தது. தலைவாசல் அருகே, நத்தக்கரை கிராமத்தில், விநாயகர், மாரியம்மன், அம்பாயிரம்மன், கருப்பையா, அய்யனார் ஸ்வாமிக்கு ஊரணி பொங்கல் மற்றும் தேர்த் திருவிழா, கடந்த, 10ம் தேதி, துவங்கியது. நேற்று முன்தினம், காலை, 6 மணியளவில், காத்தவராயன் ஸ்வாமி, கழு மரம் ஏறும் நிகழ்ச்சியும், காலை, 10 மணியளவில், அலகு குத்துதல், அக்னி சட்டி, பால் குடம் ஊர்வலம், அங்கபிரதட்சனை செய்தல் நடந்தது. மாலை, 3 மணியளவில், 6.50 லட்சம் ரூபாயில், புதிதாக வடிவமைக்கப்பட்ட, 30 அடி உயர தேரினை, பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள், வடம் பிடித்து இழுத்தனர். தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை, 4 மணியளவில், மஞ்சள் நீராடுதல் விழாவுடன், தேர்த்திருவிழா முடிவடைந்தது. ஆத்தூர் டி.எஸ்.பி., வேளியப்பன் தலைமையில், போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.