பதிவு செய்த நாள்
17
செப்
2013
10:09
சேலம்: சேலம் குகை பகுதியில் அமைந்துள்ள காட்டு முனியப்பன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது.சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருமணமுத்தாற்றின் தென் பகுதியில், குகை கல்யாணப்பேட்டையில், காட்டு முனியப்பன், காளியம்மன், செல்வ விநாயகர், வழிவிடு முருகன் கோவில் உள்ளது. கோவிலில் நேற்று காலை, 5 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. அதிகாலை, 5.30 மணிக்கு மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம் நிகழ்ச்சி நடந்தது. காலை, 6 மணியில் இருந்து காலை, 7.30 மணி வரை கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. காலை, 7 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம், காலை, 8 மணிக்கு மஹாபிஷேகம், காலை, 9 மணிக்கு மகாதீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.