பதிவு செய்த நாள்
17
செப்
2013
11:09
கந்தர்வக்கோட்டை: முத்துமாரியம்மன் கோவில் ஆவணி திருவிழா கோலகலமாக நடந்தது.கந்தர்வக்கோட்டையில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா கடந்த, நான்கு வாரங்களுக்கு முன் கணபதி பூஜை, காப்புக்கட்டுதலுடன் விமர்சையாக துவங்கியது. தொடர்ந்து, நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. இதில் முக்கிய விழாவான முத்துப்பல்லக்கு ஊர்வலத்தையொட்டி, அதிகாலை, 3 மணி முதல் பக்தர்கள் கோவிலுக்கு வரத்துவங்கினர். கந்தர்வக்கோட்டை வங்கார ஓடை குளத்தில் குளித்து, உடலில் கரும்புள்ளி,செம்புள்ளி குத்தி, தாரை தப்பட்டை முழங்க, கையில் வேப்பிலையுடன் ஊர்வலமாக, மூன்று முறை கோவிலை வலம் வந்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதன்மூலம் அம்மை நோய் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். தொடர்ந்து பால்காவடி, பிள்ளை தொட்டி காவடி, பறவை காவடி என, பலவகை காவடிகளை பக்தர்கள் எடுத்து, வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று முன்தினம் நள்ளிரவு முத்துப்பல்லக்கில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர்வலம், கந்தர்வக்கோட்டையில் ராஜவீதிகளில் நடந்தது. இதைத் தொடர்ந்து, ஊர்வலத்தில் ஆங்காங்கே பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாட்டை ஊர் துமக்கள் செய்திருந்தனர்.