பதிவு செய்த நாள்
17
செப்
2013
11:09
வடமதுரை : வடமதுரை பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மங்கம்மாள் கேணி விநாயகர் கோயிலில் இருந்து தீர்த்தக்குடம் அழைத்து வரப்பட்டது. 108 மூலிகைகளுடன் யாக சாலை பூஜைகள் முடிந்ததும், கடம் புறப்பாடாகி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார பகுதியினர் திரளாக பங்கேற்றனர். பாடியூர் ஊராட்சி பி.புதுப்பட்டி காளியம்மன், பகவதியம்மன், மாரியம்மன் கோயிலும் கும்பாபிஷேகம், புதுப்பட்டி, நாட்டாண்மைகாரன்பட்டி,நடுப்பட்டி, பாடியூர், மோளப்பாடியூர், முள்ளிப்பாடி பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நத்தம்: குடகிப்பட்டி ஊராட்சி கரந்தன் மலையில் அமைந்துள்ள அய்யனார் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டாம், மூன்றாம்காலயாக பூஜைகளும், விக் னேஸ்வர பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை நடந்தது. கும்பகலசத்தில் கரந்தன் மலை கன்னிமார் தீர்த்தம், கொடுமுடி, அழகர்கோயில், சுருளி, ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. சுற்றுப்புற கிராமமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு சுவாசி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.