மேலூர்:மேலூர் யூனியன் அலுவலகம் எதிரில், முத்துமாரியம்மன், சுவாமி அய்யப்பன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. செப்., 12ல் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கி, தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தன. ஸ்தபதி தணிகாசலம், குருக்கள் காளீஸ்வரர், கண்ணன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கோயில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.