பதிவு செய்த நாள்
18
செப்
2013
10:09
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவையொட்டி, நேற்று மாலை நடந்த கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், சந்தனக்கூடு விழா, செப்.,7ல் துவங்கியது. நேற்று மதியம் ஏர்வாடி முஜாபிர் நல்ல இபுறாகிம் மகாலிருந்து இருந்து, அலங்கார ரதத்துடன் கொடி ஊர்வலம் புறப்பட்டது. நான்கு ரத வீதிகளில் இந்துக்கள், பிறைக்கொடிகளை ஏந்தி அணிவகுத்து தர்கா வந்தடைந்தனர். மாலை 6.50க்கு, தர்கா கமிட்டி தலைவர் அம்சத் ஹூசைன் கொடியேற்றினர். மாவட்ட அரசு ஹாஜி சலாஹுத்தீன் சிறப்பு பிரார்த்தனை செய்தார். செப்.,29ல் சந்தனக்கூடு, அக்.,6ல் கொடியிறக்கத்துடன், விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அம்சத் ஹூசைன், செயலாளர் செய்யது பாரூக் ஆலிம் அரூஸி, உப தலைவர் செய்யது சிராஜ்தீன் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.