Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா கோகுல கிருஷ்ணன் கோயிலில் புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவசூரிய பெருமானுக்கு மகாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2013
11:09

கும்பகோணம்: சூரியனார்கோவில் சிவசூரியபெருமானுக்கு நேற்று நடந்த மகாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான உஷாதேவி, பிரத்யுஷாதேவி உடனாய சிவசூரியபெருமான்கோவில் உள்ளது. தமிழகத்தில் நவக்கிரகங்களுக்கென்றே அமைந்துள்ள சிறப்பு பெற்ற தலம். இங்கு சூரியபெருமானுக்கு ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு ஹோமத்துடன் மகாபிஷேகம் நடப்பது வழக்கம். நேற்று புரட்டாசி மாத முதல்ஞாயிற்றுக்கிழமை மகாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. உற்சவர் உஷாதேவி, பிரத்யுஷாதேவி உடனாய சிவசூரியபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், பின் கடங்கள் எடுத்து வரப்பட்டு மகாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வெள்ளிக்கவஷம் சாத்தப்பட்டு புஷ்பலங்காரம், புஷ்பாராதனைக்கு பின் மகா தீபாராதனை காட்டப்பட்டது. மகாபிஷேகத்தில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை சுப்ரமணியத் தம்பிரான் சுவாமிகள் கலந்துகொண்டு முன்னிலை வகித்தார். மகாபிஷேகத்தில் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பலரும் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி புனித புளி ஆஞ்சநேயர் கோயில் ராமநவமி விழாவில் ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar