Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்வம் தரும் ஐயப்பன் கோடி அர்ச்சனை! உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி ..!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குதிரை வண்டிய ஓட்டிய குரு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2013
03:09

காஞ்சி மகாப்பெரியவரை தங்கள் குருவாக ஏற்றவர்கள் எத்தனையோ பேர் உண்டு. வாழும் தெய்வமான அவரை, இன்றும் கூட பலரும் மானசீக குருவாக ஏற்று வருகின்றனர். ஆனால்,  அந்த குரு, தனக்கு குரு என்று யாரைச் சொன்னார் தெரியுமா? தெரிந்தால், மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்.  மகாபெரியவரிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு பணக்கார பக்தர், அடிக்கடி காஞ்சி மடம் வந்து பெரியவரைத் தரிசித்து செல்வார். ஒருமுறை, அவர் தனது குடும்பத்தாருடன், தான் வாங்கிய புதிய காரில் மடத்திற்கு வந்தார். அவர்  அருகிலுள்ள கலவை கிராமத்திற்கு சென்றுள்ளார் என்பதை அறிந்து, அங்கு சென்றார்.  பெரியவரைத் தரிசித்த அவர், சாவியை பெரியவரிடம் கொடுத்து, பெரியவரே! தங்கள் தொட்டு ஆசிர்வதிக்க வேண்டும், என்றார். பெரியவர் அவரிடம், கலவையில்  ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி, நீ அங்கு செல். அங்குள்ள மரத்தின் அடியில், ஒரு பெரியவர் தாடி மீசையுடன் படுத்திருப்பார். அவரை உன் புதுக்காரில் அழைத்து வா, என்று உத்தரவிட்டார். பெரியவர் சொன்னபடியே, அவரும் அங்கு சென்று அந்த முதியவரை அழைத்து வந்தார். இருவரும் பெரியவர் முன்னால் அடக்கமாக நின்றனர். பெரியவர் பணக்காரரிடம், இவரை யாரென்று உனக்குத் தெரியாது. ஏன் அழைத்து வரச்சொன்னேன் என்றும் தெரியாதல்லவா! இவர் தான் எனக்கு குரு. நான் துறவுப்பட்டம் ஏற்பதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து கலவைக்கு வந்தேன். அங்கிருந்து என்னை ஜட்காவில் (குதிரை வண்டி) அழைத்து வந்தவர் இவர் தான். வரும் வழியில் ஸ்ரீமடம் குறித்தும், அங்குள்ள நடைமுறைகள் குறித்தும், தனக்குத் தெரிந்த மொழியில் (இயல்பான பேச்சு) எனக்குச் சொல்லிக்கொண்டே வந்தவர். அவர் மூலம் பல விஷயங்களை நான் அறிந்து கொண்டேன், அது மட்டுமல்ல, மிகவும் ராசியானவரும் கூட. அவர் கையில் சாவியைக் கொடுத்து வாங்கிக்கொள், நலமாய் இருப்பாய், என்றார். ஆச்சரியப்பட்ட பணக்காரர், அந்த முதியவரி டம் சாவியைக் கொடுத்து வாங்கிக் கொண்டார். ஜாதி மதம் பாராமல், தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது, இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற மகாபெரியவரின் பரந்த மனப்பான்மையை புகழ்வதற்கு வார்த்தைகள் ஏது! அந்த தெய்வத்தை நம் மானசீக குருவாக ஏற்று, அவரது நல்லாசியுடன் உயர்ந்த நிலையை அடைவோம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar