தனித்தனியாக இருந்தால் தானே இணைய முடியும். இசையும் இறைமையும் எப்போதும் ஒன்றாகவே உள்ளன. சுந்தரர் ஏழாம் திருமுறையில், ஏழிசையாய் இசைப் பயனாய் இருப்பவனே என்று சிவனைக் குறிப்பிடுகிறார். அப்பர் பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி என்று கயிலைத் தாண்டகத்தில் குறிப்பிடுகிறார். இறைவனே இசைவடிவம் எனும்போது, இசையால் வசமாக இதயம் எது? இசையால், கடவுளை ஆராதிப்பதற்கு நாத உபாசனை என்று பெயர். பாட்டைப் பாடுபவரோடு, அதைக் கேட்பவருக்கும் இன்பம் தரும் தனித்தன்மை கொண்டது இசை மட்டுமே.