காஞ்சிபுரம்:பெருநகர் பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பவித்ர உற்சவம் நேற்று துவங்கியது. நேற்று மாலை, 4:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன், துவங்கிய பூஜை, இரவு, 9:00 மணி வரை நடந்தது. இன்று காலை, 8:00 மணிக்கும், நாளை, காலை, 7:30 மணிக்கும், சிறப்பு அலங்காரத்தில், சுவாமி பக்தர் களுக்கு அருள்பாலிப்பார்.