பதிவு செய்த நாள்
26
செப்
2013
10:09
மதுரை : மதுரையில், திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி, இசைக் கல்வி அறக்கட்டளை சார்பில், அடுத்த ஆண்டு ஜன., 4 முதல் 6 வரை "தேவாரத் தமிழிசை மாநாடு நடக்கிறது. இதில், தேவார ஒப்புவித்தல் போட்டி இலவச தேவார இசைப் பயிலரங்கம், பண்கள் தொடர்பான கருத்தரங்கம் நடக்கிறது. மாநாட்டில், 63 பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 63 நாயன்மார்கள் பற்றிய பேச்சரங்கம் நடத்தப்படும். இதில் பங்கேற்க தலைமை ஆசிரியரின் கையொப்பத்துடன் 94439 30540 அல்லது செப்., 28 அல்லது அக்.,5ல் மாலை 6 மணிக்கு மதுரை தானப்பமுதலி தெரு திருவாவடுதுறை ஆதினமடத்தில் சுரேஷ்சிவனை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என, ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தெரிவித்தார்.