பதிவு செய்த நாள்
28
செப்
2013
10:09
கும்மிடிப்பூண்டி:புரட்டாசி மாத உற்சவத்தினை முன்னிட்டு, திருக்கல்யாண வைபவம் நடந்தது.கும்மிடிப்பூண்டி, ஜி.என்.டி., சாலையில் உள்ள, அலர்மேல் மங்கை தாயார் உடனுறை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், 24ம் ஆண்டு புரட்டாசி மாத சிறப்பு உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம், சுதர்சன ஹோமம், திருமஞ்சனம், திருக்கல்யாண வைபவம், ஊஞ்சல் சேவை ஆகியவை நடந்தன.பின் ,ஊஞ்சல் சேவையில், ஸ்ரீதேவி,பூதேவி உடனான, சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.