பதிவு செய்த நாள்
07
அக்
2013
10:10
சிதம்பரம்: சிதம்பரம் தில்லை காளியம்மனுக்கு மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிதம்பரம் எல்லையில் எழுந்தருளியுள்ள தில்லை காளியம்மனுக்கு புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அர்த்தஜாம பூஜை மற்றும் மகா அபிஷேகம் நடந்தது. அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, வெள்ளி, ஞாயிற் றுக் கிழமைகளில் ராகு காலத் தில் தீபம் ஏற்றி காளியை வழிபட்டால் தீராத கடன், பகைவர் தொந்தரவு, பூர்வ ஜென்ம சாப தோஷங்கள் தீரும், சித்தம் தெளியும் என்பது ஐதீகம். வினாயகர் பிரம்மசாமுண்டி, சன்னதியில் நெய் தீபாராதனை, வழிபாடு, தில்லை காளிக்கு குடம், குடமாக நல்லெண்ணெய் அபிஷேகம், தைலக்காப்பு செய்து வாசனை திரவியங்கள் மற்றும் வெண்பட்டு சாற்றப்பட்டு வெட்டிவேர், விலாமிச்சு வேர்களால் ஆன சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.