சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், நவராத்திரியை யொட்டி வைக்கப்பட்ட மெகா கொலுவை ஏராளமான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கீழ வீதி வழியாக செல்லும் உள் வாயிலில் உள்ள 21ம் படி அருகே உள்ள கல்யாண மண்டபத்தில், 21 படிகள் அமைத்து பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலுவை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கும்பிட்டு செல்கின்றனர்.