Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாட்டிக்கு மோட்ச ஓலை உன்னை அறிந்தால் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தந்தை சொல் மிக்கதோர் மந்திரமேது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2013
03:10

ஒரு காலத்தில், அப்பாவைக் கண்டால் பிள்ளைகள் நடுநடுங்குவார்கள். பணிக்குச் சென்றுவிட்டு, தன் கணவர் திரும்பும் முன், அம்மா பிள்ளைகளை அலார்ட் செய்து விடுவாள். டேய்! எல்லாரும் படியுங்க! அப்பா வர்ற நேரம். அங்கே இங்கேன்னு கூச்சல் போட்டுகிட்டு திரிஞ்சா முதுகுத்தோல் பிய்ஞ்சிடும் என்று பயமுறுத்துவாள். பிள்ளைகளும் கப்சிப் ஆகி விடுவார்கள். ஆனால்... இன்று... கலியுகதர்மம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. இவர் ஆபீஸ், வேலை, வெளிநாடு, உள்நாடு என சுற்றிவிட்டு ஞாயிற்றுக்கிழமை தான் வீட்டுக்கு வருவார். அவரைப் பார்க்கிற குழந்தை, அம்மா! இந்த மாமா யாரும்மா! அடுத்த தடவை வரும்போது சாக்லெட் வாங்கிட்டு வரச்சொல்லு என்கிறது. நிலைமை தலைகீழாகி விட்டது. வேலைக்குப் போகிறோம் என்ற பெயரில், குழந்தைகளுடன் ஒட்டுதல் இல்லாமல் போய்விட்டது.  ஒரு குழந்தை படிப்பில் முன்னேறவும், வாழ்க்கை என்னும் வானத்தில் சிறகடித்து பறக்கவும் இரண்டு இறக்கைகள் தேவை. ஒன்று தாய், இன்னொன்று தந்தை. ஆனால், இறக்கை இல்லாத பறவையாகத் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள் நமது குழந்தைகள். தந்தையின் கடமை உணர்ச்சிக்கு ஒரு சம்பவத்தைக் கேளுங்கள். வங்காளத்தில் தோன்றிய அவதாரப்புருஷர் ஸ்ரீசைதன்யர்.

இவரைப் படிக்க வைக்க வேண்டும் என்பது அவரது தந்தை மிஸ்ராவின் விருப்பம். குழந்தைக்கோ படிப்பில் ஆர்வமில்லை. குழந்தைக்குரிய விளையாட்டுத்தனத்துடன் இருந்து வந்தார். இதனால் மிஸ்ரா, பிள்ளையை திட்டிக்கொண்டே இருப்பார். ஒருநாள், கனவில் ஒரு மகான் தோன்றினார்.  மிஸ்ரா, குழந்தையைத் திட்டாதே. எதிர்காலத்தில் இந்த உலகமே போற்றும்விதத்தில் அவன் ஒரு மகானாகப்போகிறவன். உலக நடைமுறைக் கல்வி அவனுக்குத் தேவையில்லை, என்றார். அதற்கு பதிலளித்த மிஸ்ரா, சுவாமி! நீங்கள் பெரிய மகானாக இருக்கலாம், என் பிள்ளையும் பிற்காலத்தில் மகானாக மாறலாம். ஆனால், இன்று தந்தை என்ற நிலையில், என் கடமையைச் செய்தாக வேண்டும். அவன் படிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில் தவறில்லையே, என  பதிலளித்தார்.  மிஸ்ராவின் கடமை உணர்ச்சியை அந்த மகான் பாராட்டினார். அத்துடன் கனவு கலைந்து விட்டது. பிற்காலத்தில், தந்தையின் கடமையுணர்வால், மக்காக இருந்த ஸ்ரீசைதன்யரும் படித்து ஆசிரியர் பணிக்குப் போய் விட்டார். சிறு வயதில் தான் செய்த தவறுகளை மனதில் வைத்து, மாணவர்களுக்கு அறிவுரைகளை எடுத்துச் சொல்லி பாடம்நடத்தினார். அனைவரும் பாராட்டும் படியான நிலையைப் பெற்றார். மகானாகவும் மாறினார்.  தந்தை சொல்லை பிள்ளைகள் கேட்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் பெற்றவர் களுக்கு கவனம் வேண்டும். சரிதானே!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar