அரசமரத்தை இன்று வெட்டினால் நாளைக்கு வேரினின்று அது மறுபடியும் தழைத்து வருகிறது. அகங்காரம் அத்தகையது. அதை எவ்வளவுதான் அகற்றினாலும் மீண்டும் மீண்டும் அது தோன்றுகின்றது. அப்படி வருகிற அகங்காரத்தை கேடற்றதாகச் செய்வதற்கு உபாயம் ஒன்று உண்டு. ஈசனுடைய தொண்டன் நான் என்கிற அகங்காரமாக அதை மாற்றி விட்டால் அது தீங்கு விளைவிக்காது. தன்னை செயலுக்கு கர்த்தாவாக உணருகிறவன், இறைவனுக்குத் தொண்டனாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும் அத்தகைய அகங்காரம் தீங்கு செய்யாது.