வேதாரண்யம்: வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா கடந்த ஒரு வாரமாக வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இதையொட்டி கடந்த 11ம் தேதி முதல் நூறாயிரம் முறை போற்றி வணங்கும் சிறப்பு லட்ச்சார்ச்சனை நிகழ்ச்சி துவங்கி, நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழா நிறைவாக, வரும் 17ம் தேதியன்று, துர்க்கையம்மனுக்கு சண்டிஹோமும், சிறப்பு வழிபாடும் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.