Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாயவன் கோவிலில் நாளை பவுர்ணமி பூஜை ... தட்சிணாமூர்த்தி மடத்தில் குருபூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலைக்கோவிலில் அன்னாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2013
11:10

காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி ஸ்வாமிக்கு அன்னாபிஷேக விழா நாளை (அக்., 18) நடக்கிறது. காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நாளை காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து ஸ்வாமிக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

* காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி காலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. மாலையில் அன்னாபிஷேகம், அலங்காரத்தில் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.
* தர்மபுரி கோட்டை ஸ்ரீ மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேச நாதேஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், அடிலம் அடிலநாதர் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலம் ஐப்பசி பவுர்ணமியையொட்டி ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அன்னாபிஷேகம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar