மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருகே பழமையான சிவன் கோவிலில் புதிய நந்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.மண்ணச்சநல்லூர் அருகே கோபுரப்பட்டியில் சோழர்காலத்தில் கட்டப்பட்ட பழமையான அவனீஸ்வரர் (சிவன்) கோவில் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் இருந்த நந்தி சிலை மூன்று துண்டுகளாக உடைந்திருந்தது. கோவிலை பழமை மாறாமல் புதுப்பிப்பதற்காக திருப்பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பணி குழுவினர் சார்பில் புதிய நந்தி சிலை பிரதிஷ்டை செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்யப்பட்டு, துறையூர் அருகே ஒக்கரையில் உள்ள ஸ்தபதி சேகர் மூலம் ஏழரை டன் எடையுடன், ஆறே கால் அடி உயரம், ஏழு அடி நீளமுள்ள நந்தி சிலை செய்யப்பட்டு கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் ஜலவாசம், தான்யவாசம், புஷ்பவாசம் செய்வதற்காக தண்ணீர் தொட்டிக்குள் வைக்கப்பட்டது.அக் 18 காலை ஏழு மணியளவில் சிறப்பு அபிஷேகம் செய்து கோவிலுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.விழாவில் திருப்பணிக்குழுவைச் சேர்ந்த அனந்தராமன், கணேசன், ராதாகிருஷ்ணன், காமராஜ், ஸ்தபதி கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.