மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ஆசிரியர் காலனியில் ராஜ அஷ்ட விமோசன மகா கணபதி கோவில் உள்ளது. இங்கு பிரகதீஸ்வரர், முருகன் ஆகிய சன்னதிகளும் உள்ளன. ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவனுக்கு மலர் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் கமிட்டியினர் செய்திருந்தனர். * மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், சக்தி விநாயகர் கோவிலில் வெள்ளிங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. இங்கு ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.