மணவாள மாமுனிகள் வீதி உலா: கோயில் கதவுகளைத் திறந்து வைக்க கோரிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2013 10:10
மணவாள மாமுனிகள் சுவாமி வீதி உலாவின் போது தேவநாதசாமி கோயில் கதவுகளைத் திறந்து வைக்கக் கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் அருகே பிரசித்தி பெற்ற, புராணங்களில் பாடப்பட்டுள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலுக்கு பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள். இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் 10 நாள்கள் உற்சவம் நடைபெறுகிறது இந்த உற்சவத்தின் போது மணவாள மாமுனிகள் வீதி உலா நடைபெறுகிறது. மாமுனிகள் வீதி உலா வரும்போது தேவநாதசாமி கோயில் சன்னதிக் கதவுகளை மூடி டுகின்றனர். வீதி உலா வருபவர்களும், மாமுனிகள் சாமியும் தேவநாதசாமியைப் பார்க்கக்கூடாது, பார்த்தால் தீட்டு என்று கூறி கதவைச் சாத்தி விடுகின்றனர் என்று மாமுனிகள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். இந்தாண்டு தேவநாதசாமி திருக்கோயில் சன்னதி கதவு திறந்திருக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.