கோபி: வெள்ளாங்கோவில் ஸ்ரீபல்லி மாயம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு அலங்காரப் பூஜையும், 9 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெறுகிறது. புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு மாவிளக்குப் பூஜை, பொங்கல், 6 மணிக்கு கிடா வெட்டுதல் உள்ளிட்டவையும், இரவு 8 மணிக்கு இன்னிசைக் கச்சேரியும் நடைபெறுகின்றன. வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும், வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மறு பூஜையும், இரவில் சிறுவர், சிறுமியரின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஊராட்சித் தலைவர் ஆப்பிள் தன்னாசி, கோபி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஞானசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.