நிலக்கோட்டை: நிலக்கோட்டை கே.சி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெய்சங்கர் வரவேற்றார். திருவேடகம் விவேகானந்தா கல்லூரி செயலாளர் நியமானந்த சுவாமி, குத்து விளக்கு ஏற்றி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் வடிவேலு உட்பட பலர் பங்கேற்றனர். தியான ஆசிரியர் ராமநாதன், ஆசிரியர் தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.