பதிவு செய்த நாள்
30
அக்
2013
11:10
ஆத்தூர்: ஆத்தூர் சோமநாதசுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ஆத்தூர் அருள்மிகு சோமநாதசுவாமி கோவிலில் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதியில் திருக்கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்தையொட்டி அபிஷேக அலங்கார பூஜையும், இரவில் திருவீதி உலாவும் நடந்தது. விழாவை ஒட்டி நேற்று காலை 9 மணிக்கு மேல் திருத்தேர் உலா நடந்தது. இன்று காலை 8 மணிக்கு அம்மன் புறப்பாடும், மதியம் 3.30 மணிக்கு சுவாமி புறப்பாடும், மாலை 5 மணிக்கு காட்சி மற்றும் மாலை மாற்றுதலும், இரவு 10 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், நாளை (31ம் தேதி) காலை 5 மணிக்கு பட்டிணப்பிரவேசமும் நடக்கிறது.தேரோட்ட நிகழ்ச்சியில் கோவில் செயல்அலுவலர் ராஜேந்திரன், தக்கார் கணபதிமுருகன், கணக்கர் பாலகிருஷ்ணன், மணியம் சரவணபவன், பட்டர் ஹரிஹரசுப்பிரமணியன்ஜனா, ஆத்தூர் பஞ். தலைவர் முருகானந்தம், தொழிலதிபர் உமரிக்காடு ரமேஷ் அண்ணாமலைசுப்பிரமணியம், அய்யப்ப சேவா சங்கத்தலைவர் மூக்கன்சாமி, ராஜாமணி ஜோதிடர், கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, கிருபாகரன் மற்றும் திருஞான திருப்பணிக்குழுவினரும், பக்தர்களும் கலந்துகொண்டனர். திருக்கல்யாண விழாவை முன்னிட்டு தினமும் அபிஷேக அலங்கார பூஜைகளும், திருவீதி உலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.