ஆறுமுகநேரி: ஆறுமுக÷ரியில் காளபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஆறுமுகநேரி பண்டார சாஸ்தா கோயிலில் அமைந்துள்ள காளபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோயில் உள்ள விநாயகர், நாகர், சுவாமி, அம்பாள், பண்டார சாஸ்தா, பூர்ன கலா, புஷ்பகலா, நவக்கிரகம், கருப்பசாமி மற்றும் காளபைரவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.