பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்றொரு பழமொழி உண்டு. ஒன்றைச் செய்ய நினைத்து அது வேறொன்றாக முடிந்தால், இந்தப் பழமொழியைச் சொல்வார்கள். ஆனால், இதன் வெளிப்படையான பொருளில் உண்மை இருக்க வாய்ப்பில்லை. பிள்ளையார் உருவத்துக்குத் தும்பிக்கை உண்டு. களிமண்ணில் யார் பிள்ளையார் பிடிக்க நினைத்தாலும், அது நிச்சயம் குரங்கு வடிவைப் பெற நியாயம் இல்லை. பின்பு ஏன் இந்தப் பழமொழி புழக்கத்தில் வந்தது? இதற்கு ஓர் உட்பொருள் உண்டு. எந்தக் காரியத்தைத் தொடங்கினாலு<ம் பிள்ளையாரை முதலில் வழிபட்டு ஆரம்பிக்க வேண்டும்; காரியங்கள் கைகூடிய பின்னர், ராம நாமத்தை ஜெபித்து அனுமனை வணங்கி முடிக்க வேண்டும் என்பது நம் முன்னோர் காட்டிய வழி. அதைத்தான் இந்தப் பழமொழி விளக்குகிறது.