திருக்கோயில்களைச் சார்ந்துள்ள தெப்பக்குளங்களின் உட்பகுதியில் பல ஊற்றுக்கிணறுகள் உள்ளன. ஆவற்றிலிருந்து ஊற்று நீர் பெருகும்போது, பருவகால மாற்றத்திற்கேற்ப பூமிக்கடியிலுள்ள கனிமப் பொருட்களின் சக்தியும் வெளிப்பட்டு குளத்து நீரில் கலக்கிறது. இத்திருக்குளங்களில் நீராடுவதால் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது.