காஞ்சிபுரம்: ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பூரம் நட்சத்திரம் காமாட்சியம்மனின் அவதாரத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஐப்பசி பூரம் நட்சத்திரமான புதன்கிழமை அம்மனின் அவதாரத் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட பால்குட ஊர்வலம் புறப்பட்டது. சிறப்பு விருந்தினராக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பாப்பிராஜு கலந்து கொண்டார்.