பவானி: சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள 17 உண்டியல்களில் பக்தர்கள் ரூ.6.10 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர். மேலும், தங்கம் 43 கிராமும், வெள்ளி 93 கிராமும் செலுத்தப்பட்டிருந்தது. பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி, கோவில் உதவி ஆணையாளர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.