விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த கல்லறை திருவிழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்தவர்கள், இறந்த தங்கள் மூதாதையர்களை நினைவு கூறும் வகையில் நவம்பர் 2ம் தேதி கல்லறை தினமாக அனுஷ்டித்து வருகின்றனர். நேற்று முன்தினம் கல்லறை திருநாளையொட்டி விருத்தாசலம் புதுக்குப்பம் ரயில்வே கேட் அருகிலுள்ள கல்லறையில் மாலை 5:30 மணியளவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பாத்திமா அன்னை ஆலய பங்குத் தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் பங்குத் தந்தைகள் பிச்சைமுத்து, பெஞ்சமின், செல்வராஜ் ஆகியோர் மலர்களால் அலங்கரித்த கல்லறைகளில் புனித தீர்த்தம் தெளித்து பிரார்த்தனை செய்தனர். நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று தங்கள் முன்னோருக்கு மரியாதை செலுத்தினர். மங்கலம்பேட்டை அடுத்த கோணான்குப்பம் பெரிய நாயகி அன்னை ஆலயத்தில், பங்கு தங்தை அருள்தாஸ் தலைமையில் கல்லறை திருவிழா நடந்தது. பங்கு தந்தை சூசைராஜ் உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.