பதிவு செய்த நாள்
08
நவ
2013
11:11
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் இன்று மாலை, கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. வத்திராயிருப்பில் நடைபெறும் முக்கிய விழாக்களில், கந்தசஷ்டி விழா பிரசித்தி பெற்றது. இங்குள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில், சுப்பிரமணிய சுவாமிக்கு 7 நாட்கள் விழா நடைபெறும். இதன் 6ம் நாளில் சூரசம்ஹாரம், 7ம் நாள் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த ஆண்டு சஷ்டி விழா, நவ.,3 ல் துவங்கியது. ஞானதேவபாரதி சுவாமிகள் துவக்கி வைத்து, அருளாசிகள் வழங்கினார். தொடர்ந்து நாட்டியம், இசை, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன. 6 ம் நாளான இன்று மாலை 4.30 மணிக்கு, முத்தாலம்மன் திடல் மைதானத்தில், சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழாக்குழு அமைப்பாளர் கதிரேசன், நிர்வாகிகள் செய்துள்ளனர்.