ராஜசோளீஸ்வரர் கோயிலி வெள்ளிக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சிறப்பு வழிபாடுகளுக்குப் பிறகு தேர் வடம் பிடிக்கப்பட்டது. கோயிலின் நான்கு வீதிகளில் வலம் வந்த தேர் 12.30 மணியளவில் நிலையை அடைந்தது. தொடர்ந்து, அபிராமி அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கும், முருகனுக்கும் சிறப்பு தீபாராதனையும், முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றன.