நம் காரியம் நடக்க பணத்தைக் கடனாக வாங்குகிறோம். செலவழித்துவிட்டு திருப்பி செலுத்த வேண்டிய சமயத்தில், அதற்கு கடன் தொல்லை என்று பட்டம் சூட்டிவிடுகிறோம். பிறரை குறைகூறுவதில் மனித வர்க்கத்துக்கு ஈடு இணையே கிடையாது. சீக்கிரம் கடனை திரும்பச்செலுத்த உறுதி எடுப்பதுடன் செவ்வாய்கிரக வழிபாட்டையும் செய்ய வேண்டும். திருவாரூர் மாவட்டம், திருச்சேறை ருணவிமோசனர் கோயிலுக்கு சென்று வழிபட்டாலும் கடன் தீரும்.