பதிவு செய்த நாள்
13
நவ
2013
10:11
சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் நேற்று காலை திறக்கப்பட்டன. கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி தலைமை வகித்தார். விருதுநகர் இந்து சமயஅறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதாப்ரியதர்ஷினி, கோயில் செயல்அலுவலர் தனபாலன், பரம்பரை அறங்காவலர்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன்பூஜாரி, ராமர்பூஜாரி, அரிராம்பூஜாரி ஆகியோர் வகித்தனர். கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மகளிர்சுயஉதவிக்குழு பெண்கள், காணிக்கை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். இதில், பக்தர்கள் கடந்த ஒரு மாதக்காலத்தில், பக்தர்களுக்கான காணிக்கையாக உண்டியலில், 17லட்சத்து 69ஆயிரத்தி 305 ரூபாய் ரொக்கம், வெள்ளிப்பொருட்கள் 154 கிராம், தங்கம் 76கிராம் செலுத்தியிருந்தது தெரியவந்தது. கோயில் வளாகத்தில் உள்ள கோசாலை உண்டியலும் திறந்து கணக்கிடப்பட்டது. இதில், 1லட்சத்து 81ஆயிரத்தி 78 ரூபாய் ரொக்கம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியது தெரியவந்தது. இவை உடனடியாக கோயில் கணக்கில் வங்கி ஒன்றில் டெபாசிட் செய்யப்பட்டன.